page counter

Tuesday, June 2, 2015

 ஒரு ஆண்  சாதிப்பதற்க்கும் ஒரு பெண் சாதிப்பதற்கக்கும் நிறையவே வித்யாசம் உள்ளது. அதுவும் நம் இந்திய சாசனத்தில்  ஒரு உதாரணத்திற்காக எடுத்துக்கொண்டாலும் பலவிதத்திலும் சோதனைக்கு உள்ளாக்கப்பட்டே நியாயம் வழங்கப்படுகிறது.இது தனிப்பட்ட பெண்ணாக இருந்தாலும் சரி பொது நலத்திற்க்காக செயல்படும் பெண்ணாக இருந்தாலும் சரி நீதி அல்லது அநீதி என்ற அடிப்படை தத்துவம் இருவருக்கும் ஒன்றானாலும் பெண்ணுக்கு வழங்கப்படுவதில் பல சிக்கல்களை சந்தித்த பின்பே வழங்கப்படுகிறது.ஒவ்வொரு கட்டத்திலும் தனது அங்கீகாரத்தை நிலைநா ட்டுவதற்க்காக   பல சோதனைகளை சந்தித்தே தீரவேண்டிய கட்டாயத்திற்கு உள்ளாக்கபடுகிறாள். அதுவும் ஆண் ஆதிக்க வட்டம் என்பது பெரியது அதற்க்கு மத்தியில் ஒரு பெண் தன்னை குற்றமற்றவள் என்று நிரூபிக்க ஒரு ஆணையே நாடவேண்டிய அவல நிலையாகவும்  உள்ளது. அதற்கும் பல தடைகளை மீறி செயல்படவேண்டிய கட்டாயம் . பின் பலம் உடைய பெண்ணிற்கே இக் கதி என்றால் தனிப்பட்ட பெண்ணின் கதி என்ன என்பதை சற்றே சிந்திக்க வேண்டி உள்ளது. பல பெண்களின் இக்கட்டான நிலை வெளி உலகற்க்கு தெரியாமலே மறைக்கப்பட்டுள்ளது அல்லது மறைந்து போய் உள்ளது. இன்றும் ராமாயண காலத்தை முன் உதாரணமாக கொள்கிறோமே தவிர அதன்பின் நடந்த பல கசப்பு நிகழ்வுகளை நினைவுகூர மனம் மறுக்கிறது. நடந்தவை நடந்தவைகளாகவே இருக்கட்டும் நடப்பவை நன்மைக்காக பாடுபடுவோம்   என்கிறோம்  ஆனால் இன்றும் பெண் இனத்திற்காக போராட யாரும் துணிவதில்லை அவள் தனித்தே செயல்பட  வேண்டியுள்ளது.மேலும் தன்னை பாது காத்துக்கொள்ள ஒரு அரணை அமைத்துக்கொள்ள வேண்டி உள்ளது. இதுவும் ஒரு மாயை இம்மாயயை தவிர்க்க பல ஆண்களை எதிர்க்க அல்லது தவிர்க்க  தனித்தே போராடவேண்டிய சூழ்நிலை. 
இதற்க்கு யாரிடமிருந்து என்ன பதில் 

No comments:

Post a Comment